சமீபத்தில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது