இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இன்றும் நேற்றை போலே சற்று சரிந்துள்ளது. நேற்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமானது.
பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் மாலைக்குள் மீண்டும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இன்று தொடக்கத்திலிருந்தே சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண்கள் வர்த்தகம் முடிவில் தலா 1% வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 652 புள்ளிகள் சரிந்து 59,646 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 198 புள்ளிகள் குறைந்து, 17,758 புள்ளிகளில் வணிகமாகி நிறைவடைந்தது.