மீண்டும் கொரோனா பாதிப்பு!

Filed under: இந்தியா |

தற்போது மீண்டும் இந்தியாவில் கொரானா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதித்த 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. நாடு முழுதும் தற்போது 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஜேஎன் 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துள்ளனர். புத்தாண்டு மற்றும் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது