முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உயிரழப்பு – தலைவர்கள் இரங்கல்!

Filed under: இந்தியா |

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் காலமானார். இவருடைய மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

1938ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர். பின்பு பாஜக துவங்கிய காலத்தில் முதல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகிய துறையில் அமைச்சராக இருந்து சிறப்பாக விளங்கினார்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி அவருடைய வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்தார். அப்போதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிசையில் இருந்தார். தற்போது இன்று காலமானார்.

https://twitter.com/CMOTamilNadu/status/1310096352739618816

இவரின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து உள்ளனர்.