மீண்டும் மாணவி தற்கொலை

Filed under: தமிழகம் |

மீண்டும் ஒரு பள்ளி மாணவி தமிழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று பள்ளிப்பட்டு தாலுக்கா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கங்கோத்ரி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளிப்பட்டு தாலுக்காவின் ராமா நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தாமு. இவரது மனைவி ராகராஜேஸ்வரி. இவர் கொரோனாவால் கடந்தாண்டு உயிரிழந்தார். இவர்களுக்கு கங்கோத்ரி உட்பட 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கங்கோத்ரி, அங்குள்ள கீச்சலம் அரசினர் மேல் நிலைப்பள்ளீயில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தாய் இறந்தபின் அதிகளவில் மன உளைச்சலில் இருந்ததாகத் கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியின் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.