முதலமைச்சருக்கு- வானதி சீனிவாசன் கண்டனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் அவர், “ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார். அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய ஜனதா கட்சி பற்றி குறை கூறியது இவை எல்லாம் அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாக நாங்கள் பார்க்கின்றோம். அவர் அதற்கு முன்பாக பேசுகின்ற போது தமிழகத்திற்கு மத்திய மோடி அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறார். பிரதமர் மோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் அரசு நிகழ்ச்சிகளை இங்கே வந்து துவக்கி வைக்கின்ற போது பக்கத்திலேயே அமர்ந்து கேட்டிருக்கிறார். அது அவருக்கு தெரியவில்லையா? எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்காக கொடுத்திருக்கிறார் அப்பொழுது எல்லாம் உங்களுடைய காதுகளை வசதியாக மூடி வைத்து விட்டீர்களா. தென்னை விவசாயிகளுக்கு என அறிவிப்பு என்று பார்த்தால் தேங்காய் எண்ணெய்களை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதைப்பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்தை பொருத்தவரைக்கும் எந்த ஒரு சிறுபான்மை மதத்தினருக்கும் எதிரானது அல்ல முழுக்க முழுக்க பக்கத்து நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்த நாட்டிற்கு அடைக்கலமாக வந்திருக்கக்கூடிய இந்த நாட்டினுடைய குடியுரிமை சட்டத்தின்படி அவர்களுக்கு இருக்கின்ற காலா அளவினை குறைத்து 5 வருடம் அவர்கள் இருந்தால் போதும் என்ற ஒரு சலுகை மட்டும் தான் சிஏ சட்டம் என்பது. தங்களுடைய அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களை தூண்டி விடுகிறார்கள் என்பதுதான் எங்களுடைய பதில்” என தெரிவித்தார்.