முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

Filed under: சென்னை |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.