நாவலர் நெடுஞ்செழியனின் முழு உருவ சிலை அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

Filed under: சென்னை |

பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பின்னர் அவருடைய பிறந்த தினமான ஜூலை 11ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.

முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசியலில் நீண்ட காலமாக அமைச்சராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இவர் எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர் சிறந்த சொற்பொழிவாளர் என பன்முக திறமையை கொண்டவர் மற்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டவர்.

மேலும், நாவலர் எழுதிய “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்” என்கிற நூல்லை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.