முதல்வருக்கு நன்றி கூறிய எம்பி.,

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க ஆணை பிறப்பித்துள்ளதற்காக சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. மத்திய அரசு அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ், எம்பி, சு.வெங்கடேசன் எம்.பி. பலரும் எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழகத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கு, சு. வெங்கடேசன் எம்.பி. டுவிட்டரில், “தமிழக முதலமைச்சருக்கு நன்றி ஸ்டாப்ஃ செலக்சன் கமிஷன் தேர்வுகளும், தமிழக பல்கலைக் கழக தேர்வுகளும் மோதுவதால் தமிழக இளைஞர்களின் தேர்வு வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று @CMOTamilnadu கவனத்திற்கு கொண்டு சென்றேன். சில மணி நேரத்தில் தீர்வு. பல்கலைக் கழக தேர்வுகளை தள்ளி வைக்க ஆணை ஒன்றிய அரசுத் துறை அசையாத நிலையில் தமிழக அரசின் அசத்தல் தீர்வு. தமிழக மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.