முன்னணி நடிகையிடம் ரூ.80 லட்சம் மோசடி

Filed under: சினிமா |

“சுல்தான்” திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இத்திரைப்படத்தையடுத்து, விஜய்யின் “பீஸ்ட்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த “புஷ்பா” சூப்பர் ஹிட்டானதையடுத்து, “புஷ்பா -2,” “கபீர் சிங்,” “அர்ஜூன் ரெட்டி” படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில், ரன்பீர் கபீர் நடிப்பில் உருவாகி வரும் “அனிமல்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். எனவே தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகாவிடம் நீண்ட காலம் பணியாற்றிய வந்தவர் ரூ.80 லட்சம் ஏமாற்றி விட்டதாகவும் அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகிறது. ஆனால், இச்சம்பவம் பற்றி அதிகாரப்பூர்வமாக அவர் கூறவில்லை.