மூதாட்டியை கீழே தள்ளி செயின் பறித்த இளைஞர்கள்!!

Filed under: தமிழகம் |

காட்பாடி அருகே மூதாட்டியை கீழே தள்ளி 8.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவி ராணி(60). இவர் சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் அருகே இருக்கும் கடைக்கு நடந்து சென்றிருக்கிறார். அப்போது, எதிரே பைக்கில் வந்த 2 பேர் மூதாட்டியை கீழே தள்ளி செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக மூதாட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில், 2 இளைஞர்கள் மூதாட்டியை நோட்டமிட்டுக் கொண்டே பைக்கில் வந்ததும் திடீரென ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி மூதாட்டியிடம் இருந்து செயினை பறிப்பதும் மூதாட்டி சுதாரிப்பதற்குள் அவரை கீழே தள்ளிவிட்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது