தமிழக அரசு சென்னையில் மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைய இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு சென்னையில் மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது, இந்த அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை வழங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கையெழுத்து பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் எனவும் அரசு அறிவித்துள்ளது. 75வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.