யூடியூபில் சாதனை படைத்த விஜய் பாடல்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அரபிக்குத்து” பாடல் சமூக வலைதளங்களில் இன்னும் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது.

கடந்தாண்டு ஏபரல் 24ம் தேதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ரிலீசானது. இப்படத்தில் இடம்பெற்ற “அரபி குத்து” பாடல் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட்டானது. ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது. படம் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த பாடலின் தாக்கம் மட்டும் குறையவில்லை. இந்நிலையில் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த பாடல் யுடியூபில் சுமார் 40 கோடி பேருக்கும் மேலான எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.