ஆக்சன் இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் அருண்விஜய் – இவரா இயக்குனர்!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் மற்றும் ஆக்சன் ஹீரோவாகவும் நடித்து வருபவர் அருண்விஜய். இவர் ஹீரோவாக நடித்த தடையற தாக்க, குற்றம் 23, தடம் மற்றும் வில்லனாக நடித்த என்னை அறிந்தால் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் தான் என்ன கதை என்பது புரியும் என சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அருண்விஜய் கொரோனா வைரஸ் முழுமையாக முடிந்த பின்னர் ஆக்சன் இயக்குனரான ஹரி இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என தகவல்கள் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறுகின்றனர்.