சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய திரைப்படம் “டான்”.
இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். படத்தின் வெற்றிக்குப்பின், அவரது நடிப்பில் “பிரின்ஸ்,” “அயலான்” என படங்களில் வரிசையாக திரைக்கு வர உள்ளன. ஒரு பிரபல யூடியூப் சேனலில் சிவகார்த்திகேயன் அதிக பங்குகள் வைத்துள்ளதாகவும், இந்தச் சேனலுக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த யூடியூப் சேனலை நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வாங்கப்போவதாகவும் கூறப்படுகிறது.