ரயிலில் செல்பி: மாணவன் பலி!

Filed under: தமிழகம் |

ரயிலின் மீது ஏறி செல்பி மீது உள்ள மோகம் ஒரு மாணவனின் உயிரை வாங்கி உள்ளது.

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வர் 12ம் வகுப்பு படிக்கிறார். விக்னேஷ்வர் நேற்று தனது நண்பர்கள் சிலருடன் கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களில் ஏறிய விக்னேஷ்வர் மற்றும் நண்பர்கள் செல்பி எடுத்துள்ளனர். விக்னேஷ்வர் ஒரு ரயிலின் மேல் பகுதிக்கு ஏறிய போது ரயிலின் மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ்வரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் விக்னேஷ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்பி மோகத்தால் +2 மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.