சர்வதேச விண்ªªளி நிலையத்திலிருந்து மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதல் தொடர்ந்து 150 நாட்களைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரஷ்யா போரிட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை பாதிக்கும் என ரஷ்யா விண்வெளி ஆய்வு நிறுவனமாக ரோஸ்கோஸ்மாஸ் எச்சரித்தது. இதையொட்டி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் மத்தயில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.