அமெரிக்கா நாட்டின் விமானங்கள் ரஷ்யா பகுதிகுள் நுழைந்ததா?

Filed under: உலகம் |

ரஷ்யா பகுதிகுள் அத்துமீறி இரண்டு அமெரிக்கா விமானங்கள் நுழைந்ததை வெளியேற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை பற்றி வெளியிட்ட செய்தியில், ரஷ்யா எல்லைக்கு உள்ளடங்கிய கருங்கடல் பகுதியில், அமெரிக்கா ராணுவத்தின் போஸிடான் போர் விமானம் மற்றும் RC-135 உளவு விமானங்கள் அத்துமீறி நுழைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த விமானங்களை வழி மறித்து ரஷ்யாவின் ஜெட் விமானம், அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் எல்லை பகுதியை விட்டு வெளியேற்றும் வரை பின் தொடர்ந்து சென்றது என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.