ரஷ்ய அரசு ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் சாதனைகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமானோர் ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மூலம் உளவு நிறுவனங்கள் சோதனை செய்யும் வாய்ப்பிருப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் சாதனங்கள் மூலம் உளவு பார்க்கக்கூடும் என்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு விளக்கமளித்துள்ளது.