திருவாரூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ரிலைன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது சிவப்பிரகாசம் என்பவர் எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்ததாக திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ரூ.265க்கு விற்க வேண்டிய உள்ளாடையை 278 ரூபாய்க்கு விற்றதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் விசாரணை செய்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பில் தமிழ்நாடு மாநில நல நிதிக்கு ரூபாய் இரண்டு லட்சமும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூபாய் பத்தாயிரமும் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.