ரீல்ஸ் செய்த மனைவிக்கு வெட்டு!

Filed under: சென்னை |

ஆண் நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் செய்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது பெரும்பான்மையான நேரத்தை ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற சிறு வீடியோக்களை செய்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலசமயம் இந்த ரீல்ஸ் மோகம் ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு. அதுபோல் சென்னையில் அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி ஈஸ்வரி. கடந்த சில காலமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிய ஈஸ்வரி அதில் ரீல்ஸ் செய்து வெளியிடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ளார். ஈஸ்வரியில் ரீல்ஸ் மோகத்தால் ஆத்திரமடைந்த சாலமன் அவரை வெட்டியுள்ளார். இதனால் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயங்களுடன் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.