ரூ.6000 நிவாரண தொகை குறித்து நெறிமுறைகள்!

Filed under: அரசியல்,சென்னை |

ரேஷன் கடை ஊழியர்களுக்கு புயல் மற்றும் வெள்ள நிவாரண தொகை ரூ.6000 வழங்குவதன் தொடர்பாக பல நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று முதல் இதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த நெறிமுறைகள் பின்வருவமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவை & நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல், ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும், டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும், மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.