தனி ஒரு ஆளாக 13 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் கனடாவைச் சேர்ந்த இளைஞர்.
உலகில் வெப்ப நிலை அதிகரித்து வருவதோடு அல்லாமல் அண்டார்டிக்கில் பனிப்பாறையில் கணிசமாக உருகிவருவதால்கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. உலகிலுள்ள காடுகள், மரங்கள் எல்லாம் மக்களுக்காகவும் நிறுவனங்களின் தேவைக்காகவும் அழிக்கப்பட்டு, வனங்கள் வர்த்தக நிலங்களாக மாறி வருகிறது. கனடா முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் தனியாக நட்டு சாதனை படைத்துள்ளார். கனடா நாட்டிலுள்ள கியூபெக்கைச் சேர்ந்த இளைஞர் ஆண்டோபின் முதலில் பொழுபோக்கிற்காக மரக்கன்றுகள் நட்டபின், அதுவே தனக்குப் பிடித்துப்போய், தற்போது லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.