சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாக தகவல்!

Filed under: உலகம் |

சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாவும் மற்றும் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு மேலும் மூன்று கப்பல்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

சீனா அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் ஷாங்காயில் உள்ளது. அங்கு போர்கப்பல் வெளியிட்டு விழா நடந்துள்ளது. அதில் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஏவுகணை தாக்குதல் நடத்த பயன்படும் 054A/P ரக போர்கப்பல், பிற நாடுகளுக்காக கட்டப்பட்ட முதல் பெரிய கப்பல் எனவும் சீனா நாட்டின் ராணுவ ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய பங்கு எனவும் சீனா செய்தி பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் பாகிஸ்தான் நாட்டின் கடற்படை போர் வலிமையை அதிகப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு மேலும் மூன்று கப்பல்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.