இவ்வாண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” ஒன்றாகும்.
தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டிரெயிலர் ஏற்கனவே கூறியபடி 5 மணிக்கு வெளியான நிலையில், 9 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக சன்டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரையிலர் வெளியான 51 நிமிடத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர், 7.5 லட்சம் லைக்குகளும் 60 ஆயிரம் கமெண்டுகளும் பதிவாகியுள்ளது. கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தியும், விறுவிறுப்பாகவும் ஆக்ஷனாக அமைந்துள்ள இப்படத்தின் டிரையிலரில், விஜய்- ராஷ்மிகா உள்ளிட்ட நடிகர்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். “வீடுங்கறது கல்லு மண்ணுதான் ஆனால் குடும்பம் அப்படியா, எல்லா இடமும் நம்ம இடம் தான். நல்ல வேட்டக்காரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும், கண்ணு திறந்துதான் இருக்கனும், பவர் சீட்டுல இல்ல சார் வந்து உட்காரவன்டதான் இருக்கும்” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சரத்குமாரின் கடைசி மகனாகவும், புகைப்படக் கலைஞராகவும், இருக்கும் விஜய், தன் தந்தையும் பிசினஸ் மேனுமான சரத்குமாரின் சார்பில் வந்து நல்லபடியாக பிசிஸஸ் கவனிப்பது, எதிரிகளை வேட்டையாடுவதும் இக்கதையின் மையக்கரு என்று தெரிகிறது. மேலும், “பூவே உனக்காக” திரைப்படத்தின் விஜய்யின் டயலாக்கை யோகிபாபு கலாய்க்க அதற்கு விஜய் கவுண்டர் அடிக்கும் காமெடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.