நடிகர் விஜய் பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிக்கு, விஜயே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த கட்சியில் எனது ரசிகர்கள் சேரக்கூடாது தடை போட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்ன எஸ் .ஏ.சந்திரசேகர்.
அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியை தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர், அப்போது உங்கள் கட்சிக்கு விஜய் தடை போட்டுள்ளாரே என்பது பற்றி கேள்வி எழுப்பினர். விஜய் அப்படியா சொன்னார் என எதுவும் தெரியாதவர் போல மழுப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர், கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் பம்மினார்.
நடிகர் விஜய் வீட்டிற்கு செல்வதில்லையாமே, அவரோடு ஏழாம் பொருத்தமாக உறவு இருக்கிறதாமோ என செய்தியாளர்கள் கேட்டபோது, ஊகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியல் இல்லை என எஸ் ஏ.சி சொல்லிவிட்டார். மேலும் அண்மையில் கூட ஆயுதபூஜைக்காக விஜய் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்.
எல்லா கேள்விகளுக்கும் மழுப்பலாகவே பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனித்தனியாக வந்து செய்தியாளர்கள் கேட்டால் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு இறுதியாக நழுவி சென்றுவிட்டார்.