விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 24ம் தேதி முதல் தேதி முதல் காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த வாரம் அவர், பாஜகவில் இணைந்தோடு தனது எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 24ம் தேதி முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ராஜினாமா செய்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், பொன்முடியின் எம்.எல்.ஏ., பதவி காலியானது. ஆனாலும், அவர் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.