வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

மத்திய குழு வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழகத்திற்கு தெரிவித்துள்ளது.

மத்திய குழு சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் சேதம் குறித்து கணக்கிட சென்னைக்கு வருகை தந்தது. பின்னர் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நாங்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம். பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள மாநில அரசின் முயற்சிக்கு தங்களது பாராட்டுக்கள். வெள்ள பாதிப்பு குறித்த விரிவான அறிக்கையை மூன்று நாட்கள் கள பார்வைக்கு பிறகு மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்” என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.