வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்!

Filed under: தமிழகம்,விளையாட்டு |

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே அணியில் முன்னாள் வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பதும், அவர் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவம் செய்துள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழக ஆளுநர் ரவி அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கினார்.