புது டெல்லி,மே 02
வேளாண் பிரிவில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், உபரிப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதை மேலாண்மை செய்தல், நிறுவனக்கடன்கள் விவசாயிகளுக்குக் கிடைத்தல் மற்றும் தேவையான சட்டப்பூர்வ உரிமையுடன் பல்வேறு தடைகளில் இருந்து வேளாண் பிரிவை விடுவித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது.
தற்போதைய சந்தைப்படுத்துதலில் உள்ள சூழல்சார் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்உத்தி சார்ந்த இடையீடுகள் மற்றும் விரைவாக ஏற்படும் வேளாண்மை அபிவிருத்திச் சூழ்நிலையில் பொருத்தமான சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் ஆகியவற்றின் மீதும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த சலுகை முறையில் கடன் அளித்தல், பிரதமர் கிசான் திட்டப் பயனாளிகளுக்கான சிறப்பு உழவர் கடன் அட்டை வழங்கும் முனைப்பு இயக்கம் மற்றும் நியாயமான இலாபம் உழவர்களுக்குத் திரும்பக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் வேளாண் விளைபொருள்களின் வர்த்தகத்துக்கு உதவுதல் ஆகியவை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. விவாதத்தில் மிக முக்கியமான விவாதப்பொருளாக இ-வர்த்தகத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் இ-நாம் என்பதை மிகச் சிறப்பான வன்பொருள் கட்டுமானமாக வளர்த்தெடுத்தல் என்பது இருந்தது.
வேளாண் பொருளாதாரத்தில் மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கக் கூடிய புதிய வழிமுறைகளுக்கு உதவும் வகையில் நாட்டில் ஒரே விதமான சீரான சட்ட வரைவை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பயிர் விளைச்சலில் உயிர் தொழில்நுட்பவியலின் மேம்பாடுகள் ஏற்படுத்தும் சாதக, பாதக அம்சங்கள், உற்பத்தித்திறனை அதிகப்படுத்துதல் மற்றும் உள்ளீட்டுப் பொருள்களின் செலவுகளைக் குறைத்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாதிரி நில குத்தகைச் சட்டம் உருவாக்கியுள்ள சவால்கள், சிறு, குறு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பது எவ்வாறு என்றும் தற்போதைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை எவ்வாறு ஏற்புடையதாக மாற்றுவது என்பது குறித்தும் மிக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போதுதான் விளைச்சலுக்குப் பிறகான வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளில் போடப்படும் அதிக அளவிலான தனியார் முதலீடுகளுக்கு சலுகைகள் அளிக்க முடியும். மேலும் விளைபொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் நுகர்பொருள்களுக்கான சந்தைகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த இது உதவும்.
பிராண்ட் இந்தியா என்பதை உருவாக்கும் போது குறிப்பிட்ட விளைபொருள் சார்ந்த வாரியங்கள் / கவுன்சில்களை ஏற்படுத்துவதும் வேளாண் தொகுப்பிடங்கள் / ஒப்பந்த விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்துவதும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதிக்கு உத்வேகமாக இருக்கும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வேளாண் பிரிவில் தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் இது நமது உழவர்கள் பலன் பெறுவதற்காக ஒட்டுமொத்த மதிப்பு கூட்டு சங்கிலித் தொடரைத் திறக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. எனவே கடைசி மைல்கல் வரை தொழில்நுட்பம் சென்று சேர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சர்வதேச மதிப்புக் கூட்டுச் சங்கிலித் தொடரில் நமது விவசாயிகள் போட்டியிடும் அளவுக்கு அவர்களைத் தகுதி உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
வேளாண் பொருளாதாரத்தை ஆற்றல் உள்ளதாக ஆக்குதல், வேளாண் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் விவசாயிகளுக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்காக விவசாய உற்பத்திக் குழுக்களின் பங்கினை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சரியான விலை கிடைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குதல் ஆகியவற்றுக்காக சந்தையைக் கட்டுப்படுத்தும் தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.