ஸூம் நாய்க்கு இறுதி மரியாதை!

Filed under: இந்தியா |

தீவிரவாதிகளுடன் போராடி குண்டடிப்பட்டு இறந்த ராணுவத்தின் ஸூம் நாய்க்கு ராணுவத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மோப்ப நாய் ஸூம். சமீபத்தில் ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறிய ஸூம் அனுப்பப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதால் ஸூம் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தது. பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் அந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸூமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஸூம் உயிரிழந்தது. ராணுவத்திற்காக உயிரிழந்த ஸூமுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.