ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்!

Filed under: இந்தியா |

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மேலும், இரண்டு தீவிரவாதிகளை சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள். இதனால் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.

நேற்று மாலை பந்தா சோவ்க் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவலர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், திவரவாதிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் பின்பு இன்று அதிகாலை மேலும் இரண்டு திவரவாதிகள் மடிந்தனர்.

இந்த மோதலில் காவலர் பாபு ராம் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கடந்த இரு நாளில் நடந்த தேடுதல் பணியில் பத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.