இந்தியாவில் “6000 புதிய கிளைகளை திறக்க திட்டம்“ ஹெச்டிஎப்சி வங்கி திறப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி சுமார் 6000 கிளைகள் திறப்பது தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன், “நாங்கள் எங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 730 புதிய கிளைகள் திறந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 2000 கிளைகள் திறக்கும் எண்ணம் உள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகளைத் திறப்பதே எங்களது லட்சியம்“ என கூறினார். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.