ஹெச்.பி. நிறுவனத்தின் தகவல்!

Filed under: இந்தியா,உலகம் |

ஹெச்.பி. நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழில்நுட்ப ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் ஆள்குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் அதிலிருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள் நிறுவனம் ஆகியவை பணியாளர்களை நீக்கி வருவது தொழில்நுட்பத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஹெச்.பி நிறுவனமும் இந்த ஆட்குறைக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஹெச்.பி தனது நிறுவனத்திலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐடி துறையில் பணியாளர்கள் நீக்கப்பட்டு வருவது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக மாறும் என்று அஞ்சப்படுகிறது.