ஹெச் வினோத் பதற்றம்!

Filed under: சினிமா |

அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் “துணிவு” படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அஜீத் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையிலுள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் “துணிவு” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதாம். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் மூன்று மாதங்களுக்குள் பணிகள் முடிந்து விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.