இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும் ஜடேஜா & சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது நேவி மும்பையில், 3;30 க்கு தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணிக்கு 155 ரங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் சர்மா 75 ரன்களும், ராகுல் 39 ரன்களும்,கேன் 32 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
எனவே 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் பிராவோ மற்றும் சவுத்ரி தலா 1விக்கெட் கைப்பற்றினர்.