10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!

Filed under: தமிழகம் |

இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெளியாகின, இதனை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தேர்வு துறை இயக்ககம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பொதுத் தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் மாணவிகள் 94.66% மாணவர்கள் 88. 16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.