100 லிட்டர் சாராயம் கடத்தல்: வேலூரில் 13 பேர் கைது

Filed under: தமிழகம் |

வேலூர்,ஏப்ரல் 27
கென்னடி 

வேலூரில், போலீசார் நடத்திய சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்திவந்த 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆணையின்படி, வேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்திரவின்பேரில், பாகாயம் காவல் வட்ட ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார் பார்ட்டி ஆகியோர் சேர்ந்து, முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.வேலூரின், சகிதம் அரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவநாதபுரம், புலிமேடு, அத்தியூர் மற்றும் ஜி.ஆர்.பாளையம் பகுதிகளில்  சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்களில் கடத்திவரப்பட்ட 100 லிட்டர் நாட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை கடத்திவந்த 13 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை வேலூர் நீதித்துறை நடுவர் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி, அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.