1000 கோடியை தாண்டிய “பதான்” பட வசூல்!

Filed under: இந்தியா,சினிமா |

சமீபத்தில் வெளியான “பதான்” திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உட்பட்ட பலரும் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “பதான்.” 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான “பதான்” தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்போது “பதான்” திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது “பதான்” திரைப்படம் இந்தியில் மட்டும் 526 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனையை “பாகுபலி 2”விடம் இருந்து தன்வசமாக்கியுள்ளது “பதான்.” கடந்த சில ஆண்டுகளாக தோல்விப்படங்களாக கொடுத்து வந்த ஷாருக்கானுக்கு “பதான்” திரைப்படம் ரீ&எண்ட்ரி திரைப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியாகி 45 நாட்கள் கழித்தும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்போது வரை 1045 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து இன்னும் கணிசமான வசூலை செய்து வருகிறது.