12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

Filed under: தமிழகம் |

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் பேருந்துக்கு காத்திருந்த 12ம் வகுப்பு மாணவிக்கு தாலிகட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலையருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை எடுத்து அந்த மாணவிக்கு கட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் சிதம்பரம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.