18 நாட்களுக்கு சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் ரத்து!

Filed under: தமிழகம் |

தென்னக ரயில்வே கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் இந்நேரத்தில் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி வரை சேலம் பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.