18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி!

Filed under: தமிழகம் |

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பேருந்து ரயில் மற்றும் திரையரங்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதே தவிர கட்டாயமல்ல என மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனால் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது இவர்கள் பூஸ்டர் டோஸை அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.