கடந்த 20 ஆண்டுகளில் 5 கொடிய நோய்களை பரப்பியது சீனா – அமெரிக்கா தகவல்!

Filed under: உலகம் |

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியது; உலகையே அச்சுறுத்தி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் இதனால் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரசால் அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனா தான் காரணம் அவர்களே பெறுப்பை ஏற்க்க வேண்டும். ஏனேனில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

இதனிடையே சென்ற 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்பட 5 கொடிய நோய்களை சீனா பரப்பி உள்ளது. கொரோனா சீனாவில் தான் பரவியது அதற்கான சான்றுகளை அமெரிக்கா திரட்டி வருகிறது என கூறியுள்ளார்.