2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது!

Filed under: தமிழகம் |

2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0 என்ற வேட்டையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. இதில் போதை பொருளான கஞ்சா மொத்த வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர்.


ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்றும், 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.