2 பாகங்களில் வெளியாகும் கமல் படம்?

Filed under: சினிமா |

சென்னை, செப் 29:
கமலின் விக்ரம் படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிட, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில், விஜயசேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் மிகப்பெரிய கதைக்களத்தில் உருவாகி வருவதால், ஒரே பாகமாக வெளியிட்டால், படத்தின் நீளம் அதிகமாகி விடும் என கூறப்படுகிறது. அதை கருத்தில்வைத்து, விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.