2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

Filed under: தமிழகம் |

தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில், “தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி உண்டு. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும், திறந்தவெளியில் ஒன்றாக கூடி பட்டாசு வெடிப்பதாக இருந்தால் முன் அனுமதி பெற வேண்டும், மருத்துவமனை, கோவில் மற்றும் அமைதி தேவையான பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.