383வது சென்னை தினம்!

Filed under: சென்னை |

தமிழகத்தின் தலைநகரான சென்னை உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது.

“வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம். தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் கொண்டே இருக்கிறது சென்னை. அப்படிபட்ட இந்த மாநகர் உருவாகி 383 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மாநகர் உருவான நாளை “சென்னை தினம்” என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.