4 அமைச்சர்களை பட்டியலிட்ட அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சராக இருந்த பொன்முடி 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். இத்தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து இன்னும் நான்கு அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு மற்றும் மீண்டும் பொன்முடி அவர்கள் மீதுள்ள அமலாக்கத்துறை வழக்கு என நான்கு வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு வரும். அப்போது யார் யார் அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதும் தெரியவரும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 11 அமைச்சர்கள் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான கேபினேட் அமைச்சரவை. அந்த தீர்ப்புகள் எப்போது வரும் என்பதற்காகத்தான் நாங்கள் காத்திருக்கின்றோம், கண்டிப்பாக அடுத்தடுத்து தீர்ப்புகள் வரும்போது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இப்படி ஒரு சூழல் தமிழகத்தில் இருந்தது கிடையாது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்படும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.