400 கிலோ குட்கா கடத்தல்!

Filed under: சென்னை |

400 கிலோ குட்கா தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குட்கா போதைப்பொருள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர பரிசோதனை செய்து பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வகையில் பெங்களூரிலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதை பொருளை கடத்தி வந்த மாதவரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவகின்றனர். மேலும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர்களிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.