44 வது மாடியில் 3.2 கோடி கார் பார்க்கிங்!

Filed under: உலகம் |

ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கிய சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 44வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார்.

சீனா நாட்டில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் பெந்தவுஸின் 44 வது மாடியில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரின் கோஸ்ட் சீரிஸை வாங்கியுள்ளார். இதனை பார்கிங்க் செய்ய இவர் திட்டமிட்ட செயல்தான் இக்காரை விடவும் இவரை பிரபலமாக்கியுள்ளது. இக்காரை தன் வீட்டின பால்கனியில் நிறுத்துவதற்காக, அங்குள்ள கட்டுமான நிறுவன பொறியாளர்கள் மற்று தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உதவியில், எஃகு கேபிள்களுடன் இணைக்கப்பட்ட இரும்புக்கூண்டைப் பயன்படுத்தி, பாதுகாப்பாக 44வது மாடியின் பால்கனியில் காரைப் பார்க்கிங்க செய்துள்ளார். இதைச் செய்து முடிக்க சுமார் 1 மணி நேரமானதாக கூறப்படுகிறது. ஆனால், ஆடம்பர காரை வாங்கி, பணத்தை வீணடிப்பதுபோல் இப்படி பால்கனியில் காரை நிறுத்தியுள்ளதற்கு விமர்சனம் எழுந்துள்ளளது. இந்தக் கோடீஸ்வரர் பெயர் தெரியவில்லை. இவர், உணவு விநியோக நிறுவனத்தின் தலைவர் என தகவல் வெளியாகிறது.